முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர் என தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் கன மழைபெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட ஏனைய வட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும்.” என தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையை பொறுத்த அளவில், “நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கன மழையும், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய கூடும்.” என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

அதேபோல சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போது மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு ஆந்திரா தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.

15.10.2021, 16.10.2021: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

15.10.2021: அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக் கடல் பகுதிகள், ஆந்திர கடற்கரையோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

16.10.2021: மத்திய வங்கக் கடல், வடக்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

14.10.2021: தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

15.10.2021: தென் கிழக்கு அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள, கர்நாடக மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement:
SHARE

Related posts

85-ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு!

பேருந்துகளில் புதுப்பொலிவுடன் திருவள்ளுவர் படம் ஓரிரு நாட்களில் இடம்பெறும்- அமைச்சர் ராஜகண்ணப்பன்

Jeba Arul Robinson

“கூடுதல் அணு உலை அமைப்பதை கைவிட வேண்டும்”; திருமாவளவன் எம்.பி., வலியுறுத்தல்

Halley karthi