அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “காவிரி – வைகை – குண்டாறு இணைப்புத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு, நிலுவையில் இருந்த ஏப்ரல், மே, ஜூன் 2026, மூன்று மாதங்களுக்கான ஊதிய நிதியை விடுவிக்க உத்தரவிட்டுள்ள தவெக அரசுக்கு, மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், இத்திட்டத்தின் பணிகள் எந்தத் தடையும் இன்றித் தொடரவும், இந்தத் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படவும், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகம் மற்றும் 4 தனி வட்டாட்சியர் அலகுகளின் பணிக்காலத்தை 31.12.2027 வரை நீட்டித்து, அதற்கான அரசாணையை விரைவில் வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




