காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவரும் நிலையில்,
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, கோவை, திருப்பூர், நெல்லை, நாமக்கல், கரூர், விழுப்புரம் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கடலூர் ஆகிய 5 மாவட்டங் கள் மற்றும் காரைக்காலில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.







