கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஓபிஎஸ் வலியுறுத்தல்

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 மாதங்களாக வீடு கட்டும் பொருட்களான இரும்பு…

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 மாதங்களாக வீடு கட்டும் பொருட்களான இரும்பு கம்பி, சிமெண்ட், செங்கல் உள்ளிட்ட பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

https://twitter.com/OfficeOfOPS/status/1504311636022030339

வாணிபம் என்ற பெயரில் கொள்ளை லாபம் ஈட்டுவோரையும், கட்டுமானப் பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்துவோரையும் கண்டறிந்து அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

மேலும், ஏற்றுமதி, இறக்குமதி கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டுவர, தேவையான நடவடிக்கையை மாநில அரசு எடுக்க வேண்டும் என குறிபிட்டுள்ள அவர், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுக்குள் கொண்டு வந்து, ஏழை எளிய மக்களின் வீடு கட்டும் செலவை குறைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.