டிடிவி தினகரனை சந்திக்கிறார் ஓபிஎஸ்; ஏற்படுமா புது திருப்பம்?

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 7 மணியளவில் சந்திக்கவுள்ளனர். திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 7 மணியளவில் சந்திக்கவுள்ளனர்.

திருச்சி பொன்மலை ஜி- கார்னர் மைதானத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அணி சார்பில் ஏப்ரல் 24-ஆம் தேதி முப்பெரும் விழா மற்றும் புரட்சி மாநாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருச்சி மாநாட்டிற்குப் பின் மதுரை விமான நிலையம் வந்தடைந்த ஒபிஎஸ், செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய போது, அதிமுக தொண்டர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்பது நிரூபணம் ஆகியுள்ளது என கூறினார்.

அதிமுக விவகாரம் பூதாகரம் எடுத்த நாளிலிருந்தே அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என கூறிவந்தார் ஓபிஎஸ். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் இன்று மாலை 7 மணியளவில் திரு.டிடிவி தினகரனின் இல்லத்தில் சந்திக்கவுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.