முக்கியச் செய்திகள் தமிழகம்

“இபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்க ஓபிஎஸ்-க்கு முழு அதிகாரம் உள்ளது“ – புகழேந்தி

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு முழு அதிகாரம் உள்ளது என அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி கூறியுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, “இபிஎஸ் – ஓபிஎஸ் ஆகியோர் மீது தொடரப்பட்ட மானநஷ்ட வழக்கு அடுத்த மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைக்க அதிமுக செயற்குழு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் அதற்கு பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதெல்லாம் தென் தமிழக மக்களுக்கு அதிமுக மீது வெறுப்பை ஏற்படுத்துகிறது. புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் மருது சகோதரர்களுக்கு சிலை எழுப்பப்படும் என அறிவித்துள்ளார். பாராட்டுகிறேன்.

திமுக அரசு மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரை சூட்ட வேண்டும். சரியான பாதையில் ஓ.பி.எஸ் சென்று கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கிய போது நல்லவராக இருந்த சசிகலா இப்போது கெட்டவராக தெரிகிறார். கட்சியை பொறுத்தவரையில் ஓபிஎஸ்க்குதான் அதிகாரம் உள்ளது. அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை வேண்டும். வி.கே.சசிகலா மீண்டும் ஒன்றிணைய வேண்டும்.

ஒபிஎஸ் அல்லது சசிகலா ஆகிய இருவர்களில் ஒருவரின் தலைமையில் அதிமுக இருக்க வேண்டும்.” என புகழேந்தி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கல்வி கண் திறந்த காமராஜர்

Gayathri Venkatesan

“விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு ரூ.5,000 ஊக்கத்தொகை” – முதலமைச்சர்

Halley Karthik

கூட்டணியிலிருந்து விலகியதால் பாமகவுக்கே இழப்பு: ஜெயக்குமார்

Ezhilarasan