’கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்..’ விஜய் ஹீரோயின் ஹேப்பி போஸ்ட்

நடிகை பூஜா ஹெக்டே, மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளார். தமிழில் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர்,…

நடிகை பூஜா ஹெக்டே, மும்பையில் புதிய வீடு வாங்கியுள்ளார்.

தமிழில் மிஷ்கின் இயக்கிய ’முகமூடி’ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. தொடர்ந்து இந்தி, தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

அங்கு பிரபாஸ் ஜோடியாக ராதே ஷ்யாம், சிரஞ்சீவி, ராம் சரண் நடிக்கும் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்தியில், ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கும் சிர்கஸ் என்ற படத்திலும் நடிக்கும் அவர், தமிழில் விஜய் ஜோடியாக ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை பூஜா ஹெக்டே மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். ஏற்கனவே ஸ்ருதிஹாசன், ராஷ்மிகா மந்தனா, டாப்ஸி உள்ளிட்ட நடிகைகள் மும்பையில் வீடு வாங்கியுள்ள நிலையில், பூஜாவும் அங்கு வீடு வாங்கியிருக்கிறார். அந்த வீட்டில் நடைபெறும் வேலைகளை பார்வையிட்ட நடிகை பூஜா, அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

‘என் கனவுகளை கட்டிக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியுள்ள அவர், இந்த வீட்டுக்காக சில கோடிகளை செலவழித்துள்ளார். நடிகை பூஜா ஹெக்டே சம்பளமாக ரூ.3 கோடி வாங்குகிறார். அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் நடிகை பூஜா ஹெக்டே என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.