4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர்- புதுச்சேரி அதிமுக

4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்றும் அதிமுகவுக்கு இல்லை என புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர்…

4 பேருக்கு மட்டுமே ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளர் என்றும் அதிமுகவுக்கு இல்லை என
புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த கிழக்கு மாநில
செயலாளர் அன்பழகன், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியான நிலையில், ஓபிஎஸ் இன்னும் ஒருங்கிணைப்பாளராக தான் செயல்படுவதாக கூறுவது ஏற்படையது அல்ல என்றும், அவருடன் உள்ள மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்ட நான்கு பேருக்கு மட்டுமே அவர் ஒருங்கிணைப்பாளராக உள்ளதாகவும், 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடிக்கு உள்ளதால் வரும் 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் அவர் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், காரைக்காலில் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்டோருக்கு
காலார நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நோய்
தடுப்பு நடவடிக்கைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம்
மெத்தன போக்குடன் செயல்பட்டு வருவதாகவும், அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுகாதார
துறையின் அலட்சியத்தால் இன்று காரைக்காலில் பொது சுகாதார அவரச நிலை
அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்திய அளவில் இது புதுச்சேரி மாநிலத்திற்கு பெரிய
தலை குணிவு ஏற்பட்டுள்ளது எனவும், இதற்கு அதிகாரிகளே முழு பொறுப்பு
ஏற்கவேண்டும் எனவும் மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது புதுச்சேரி
முதல்வரும், துணைநிலை ஆளுநரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்
வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.