குளிர்கால கூட்டத்தொடரில் பணவீக்கம், சீன-இந்திய விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நாளை தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால தொடரைச் சுமுகமாக நடத்துவது குறித்து ஆலோசிக்க டெல்லியில் இன்று நடைபெற்ற அணைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட காட்சிகள் கலந்துகொண்டது.
இந்த கூட்டத்துக்கு மத்திய அமைச்சரும், மக்களவையில் பாஜக துணைத் தலைவருமான ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மக்களவை குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாட்டின் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு , உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மத்திய அரசு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
மேலும் , சீன-இந்திய எல்லையில் ஏற்பட்டுள்ள மோதல் குறித்து மத்திய அரசு தெளிவான விளக்கம் தரவில்லை என்று தெரிவித்த அவர் , காஷ்மீரி பண்டிட்கள் விவகாரம் குறித்தும் இந்த கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் கோரியுள்ளதாகத் தெரிவித்தார்.
குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை முதல் டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெறுகிறது. 23 நாட்களில் 17 அமர்வுகள் நடைபெறும். இதில் , விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் சீன-இந்திய எல்லையில் நிலவும் சூழ்நிலை ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.







