பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டம் பெங்களூருவில் இரண்டாவது ஆலோசனை கூட்டம் இன்று தொடங்குகிறது.
பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. இதில், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 24 கட்சிகள் பங்கேற்க உள்ளன
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் முன்னெடுத்துள்ளார். இதன் பலனாக எதிர்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் 23ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், எதிர்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூருவில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவீன அர்ஜூனராக செயல்பட்டு தேசிய அளவில் கூட்டணி கட்சிகளை வழிநடத்துவார் என, எம்.பி. டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன பேசபோகிறார் என்ற எதிர்பார்ப்பு தேசியளவில் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.