விம்பிள்டன் இறுதிப்போட்டி : ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் அல்காரஸ்

விம்பிள்டன் இறுதிப்போட்டியின் பரபரப்பான  ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்திய அல்காரஸ், சாம்பியன் பட்டம் வென்றார்.  கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியமாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த இரு வாரங்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற …

விம்பிள்டன் இறுதிப்போட்டியின் பரபரப்பான  ஆட்டத்தில் ஜோகோவிச்சை வீழ்த்திய அல்காரஸ், சாம்பியன் பட்டம் வென்றார். 
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முக்கியமாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் கடந்த இரு வாரங்களாக லண்டனில் நடைபெற்று வந்தது. நேற்று நடைபெற்ற  இறுதிப்போட்டியில் உலகின் முதல் நிலை வீரரும், ஸ்பெயின் நாட்டை சேர்ந்தவருமான கார்லஸ் அல்காரசும், 7முறை சாம்பியனும், இரண்டாம் நிலை வீரருமான ஜோகோவிச்சும் (செர்பியா) மோதினர்.
ஆரம்பம் முதலே ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. முதல்  செட்டை ஜோகோவிச் கைப்பற்ற, டை பிரேக்கர் வரை சென்ற இரண்டாம் செட்டை அல்காரஸ் கைப்பற்றினார். 3-வது செட்டையும் அல்காரஸ் கைப்பற்ற, எதற்கும் சளைத்தவன் அல்ல என்பதை போல் நான்காவது செட்டை ஜோகோவிச் தன் வசம் ஆக்கினார். இதனால் ஆட்டத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவியது. நீயா நானா என நீடித்த கடைசி சுற்றை அல்காரஸ் கைப்பற்றி வெற்றியை பறித்தார்.
சுமார் 4 மணிநேரம் 42 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி  பெற்று அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் ‘நம்பர் ஒன்’ இடத்தையும் அவர் தக்க வைத்துக் கொண்டார்.   அல்காரஸ் 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார்.  சாம்பியன் பட்டம் வென்ற  அல்காரசுக்கு ரூ.24½ கோடியும், 2-வது இடத்தை பிடித்த ஜோகோவிச்சுக்கு ரூ.12¼ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.