ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய குற்றால
அருவியில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில்தான் முன்னோர்கள், பித்ரு
லோகத்தில் இருந்து பூமிக்கு வருவார்கள் எனவும், அந்த நாளில் நம் முன்னோர்களை
வழிபட்டால் குடும்பம் தழைத்தோய்க்கும் என்றும் புராணங்கள் கூறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
குறிப்பாக, அமாவாசையில் மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், அதாவது, உத்ராயன காலமான தை மாதத்தில் வருகிற அமாவாசையும், புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற அமாவாசையும், தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற அமாவாசையும் ஆகிய மூன்று அமாவாசைகள் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது ஐய்தீகம்.
அதிலும், ஆடி அமாவாசையும், தை அமாவாசையும் மிகவும் பிரசித்தி பெற்றது என
கூறப்படும் நிலையில், ஆடி மாதப் பிறப்பை, தட்சிணாயன புண்ய காலத்தின் தொடக்கம் என்று புராணங்கள் கூறும் நிலையில், அந்த ஆடி மாத பிறப்பு தினத்தன்று இன்று அமாவாசை தினமும் வந்திருப்பதால் இன்றையை தினம் மிகவும் சிறப்பு என்கிறார்கள்.
இந்த நன்நாளில், புனித நதிகள், ஆறுகள், அருவிகளில் நீராடி, முன்னோர்களுக்கு எள்ளும், எண்ணெயும் படைத்து வழிபட்டு இயலாதவர்களுக்கு தம்மால்
முடிந்த உதவியை செய்தால் அவர்களது பரம்பரை தலைதூக்கும் என்பதால், ஆடி அமாவாசை தினமான இன்று தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் ஏராளமான கூடி புனித நீராடி தங்களது முன்னோர்களை வழிபட்டு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கானோர் தற்போது குற்றாலம் அருவிக்கு வருகை தந்துள்ள சூழலில்,
குற்றாலம் அருவியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும், குற்றாலம் அருவிக்கரையில் ஆங்காங்கே தீட்சிதர்கள் அமர்ந்து முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து வருகின்றனர்.
இதேபோல், குற்றாலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும்
நீர்வீழ்ச்சிகளில் புனித நீராடி பொதுமக்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு
சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.