முக்கியச் செய்திகள் இந்தியா

செப்.20 முதல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட 19 எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடு முழுவதும் செப்டம்பர் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளது.

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தவகையான போராட்டம் என்பதை அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் சூழலை கருத்தில் கொண்டு கொரோனா விதிகளை பின்பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

“கொரோனா தொற்றைக் தவறாக கையாண்ட விவகாரம், தடுப்பூசி பற்றாக்குறை, பணவீக்கம், விலையுயர்வு, வருமான வரி செலுத்தாத குடும்பத்திற்கு மாதம் ரூ.7,500 நிவாரணத் தொகை வழங்குதல் உள்ளிட்ட விவகாரங்கள் எதிர்க்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.”  என சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் மூலம், இந்தியாவின் பன்முக தன்மை, குடியாட்சியை காப்பாற்றவும் எங்களுடன் இணைந்து வாருங்கள் என மக்களுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. முன்னதாக வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை தொடர வேண்டும் என்றும் தேர்தலுக்காக தற்போதே திட்டமிடுதலை தொடங்க வேண்டும் என்றும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
SHARE

Related posts

கருப்பு பூஞ்சை மருந்தை கள்ளச்சந்தையில் விற்றால் நடவடிக்கை!

Ezhilarasan

திமுகவின் B டீமாக சசிகலா – தினகரன் செயல்படுகின்றனர்: ஜெயக்குமார்!

Jayapriya

தமிழ்நாட்டில் புதிதாக 2,505 பேர் கொரோனாவால் பாதிப்பு

Halley karthi