முக்கியச் செய்திகள் தமிழகம்

“தங்க மகளாக திரும்பி வர வேண்டும்”-அமைச்சர் வாழ்த்து

சிங்க மகள் ‘சமீஹா பர்வீன் உலக சாம்பியன்ஷிப் வென்று ‘ தங்க மகளாக ‘ திரும்பி வர வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

“செவி திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நான்காவது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ( 4 ” World Deaf Athletic Championship ) ஆகஸ்ட் 23 முதல் 28 வரை போலந்து நாட்டில் நடைபெறவுள்ளது. அதில் தமிழ்நாடு கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த வீராங்கனை சமீஹா பர்வீன் அவர்கள் நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்க தேர்வாகியிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமிதமான செய்தியாகும்.

வாழ்வில் பல போராட்டங்களை தனது மன உறுதியாலும் கடுமையான உழைப்பாலும் தொடர்ந்து வென்று வரும் வீராங்கனை சமீஹா பர்வீன் அவர்கள் இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சர்வதேச அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை நிலை நாட்டுவார் என்று அனைவரும் உறுதியாக நம்புகிறோம். லட்சியத்தை நோக்கி மனம் தளராமல் முன்னேறும் சமீஹா பர்வீன் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் ஒவ்வொருவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

அவரது வெற்றி சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொரு தமிழ் இளைஞருக்கும் நம்பிக்கை ஒளியூட்டும். தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டலில் தொடர்ந்து முன்னேறி வரும் தமிழக விளையாட்டுத்துறைக்கு சமீஹா பர்வீன் பெறப்போகும் வெற்றி மிக முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச அங்கீகாரமாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. வீர மங்கை சமீஹா பர்வீன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிக் கொடியை நாட்ட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் சார்பாகவும், தமிழக விளையாட்டு வீரர் வீராங்கனைகள், மக்கள் அனைவரின் சார்பாகவும் மனமார வாழ்த்துகிறேன்.

சிங்க மகள்’சமீஹா பர்வீன் உலக சாம்பியன்ஷிப் வென்று ‘ தங்க மகளாக ‘ திரும்பி வர வேண்டும் என்று தமிழகம் வாழ்த்துகிறது.” என விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

நிவர் புயல்: வெள்ளப் பாதிப்பை பார்வையிட்ட துணை முதல்வர் ஓ.பி.எஸ்!

Dhamotharan

வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள படங்களை நீக்க உத்தரவு

Halley karthi

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சா பறிமுதல்!

Saravana