நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி முந்தினம் தொடங்கியது. நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோர எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து மூன்று நாட்களாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை அவை கூடியதும் மக்களவையில் நீட் முறைகேடு குறித்து விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பிக்கள் 4வது நாளாக அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.




