ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – ஜெயக்குமார்

ஆட்சிக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுக உட்கட்சி தேர்தல் அமைப்பு ரீதியிலான 20 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட…

ஆட்சிக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி தேர்தல் அமைப்பு ரீதியிலான 20 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் ஜெயக்குமார் மாங்காடு பகுதியில் தேர்தலை தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

“பொதுமக்கள், அதிமுகவினரின் எண்ணம் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதுதான். அதிமுகவின் நிலைப்பாடும் அதுதான். தீபக், தீபா ஆகியோர் பெருந்தன்மையோடு இல்லத்தை நினைவில்லமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்குவதே சிறந்த தீர்வு.

ஆட்சிக்கு எதிராக யார் கருத்து தெரிவித்தாலும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களைதான் திமுகவினர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கட்டுமான பொருட்கள், அத்தியாவசியப் பொருட்களின் விலை மலை போல் உயர்ந்து கொண்டிருக்கின்றது. சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவுக்கு உள்ளது.” என்று விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

“ஆளுநர் அவருக்கான அதிகாரத்திற்குட்பட்டு செயல்படுகிறார். ஆளுநரை சந்தித்த முதலமைச்சர் நீட் தேர்வு தொடர்பாக சந்தித்தோம் என்கிறார். ஆனால் கொரோனா பரவல் குறித்து ஆலோசித்ததாக ஆளுநர் கூறுகிறார்.” என்றும் முதலமைச்சர்-ஆளுநர் சந்திப்பு குறித்து சந்தேகம் எழுப்பினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.