முக்கியச் செய்திகள் உலகம்

எழுத்தாளரை மணந்தார் பிஷப்: அதிகாரங்களை பறித்தது ஆயர் பேரவை

எழுத்தாளரை திருமணம் செய்துகொண்ட பிஷப்பின் அதிகாரங்களை பறித்து ஆயர் பேரவை உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கிறது கேட்டலோனியா (Catalonia) மாகாணம். இங்குள்ள சோல்சோனா மறைமாவட்டத்தில், இளம் பிஷப்பாக பொறுப் பேற்றவர் சேவியர் நோவல். இவர் பிஷப்பாக கடந்த 2010 ஆம் ஆண்டு பதவியேற்றபோது, அவருக்கு வயது 41. ஸ்பெயின் ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், வளர்ந்து வரும் நட்சத்திரமாக பார்க்கப்பட்ட இவர், கடந்த மாதம் தேவாலயத்தில் இருந்து திடீரென விலகினார்.

அவர் ஏன் விலகினார் என்று அப்போது கூறப்படவில்லை. அதற்கு முன் வாடிகன் அதிகாரிகளையும் போப்-பையும் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சாத்தான்களின் பாலியல் விஷயங்கள் பற்றி புனைகதைகளை எழுதி வரும் பெண் எழுத்தாளர் சில்வியா கேபலால் ( Silvia Caballol) என்பவரை காதலிப்பதாக செய்திகள் வெளியாயின. சில்வியா ஏற்கனவே விவாகரத்தானவர். The Hell of Gabriel’s Lust என்பது உட்பட சில நூல்களை எழுதியுள்ளார்.

இவரும் பிஷப்பும் கடந்த மாதம் 22 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சேவியர் நோவலுக்கு இப்போது வயது 51. இவர்கள் திருமணம் ஸ்பெயினில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் சேவியர் நோவலின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் ஆயர் பேரவை அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அவர் பிஷப் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆனால் பிஷப்புகள் செய்யும் எந்த சடங்குகளையும் கற்பித்தல் நடவடிக்கையையும் மேற்கொள்ள அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

ரஜினிகாந்த் உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கிறது: ஒய்.ஜி.மகேந்திரன்

Halley Karthik

“கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது” : கமல்ஹாசன்

Halley Karthik

தடுப்பூசி செலுத்தியவர்கள் விவரங்களை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்: அமைச்சர்

Ezhilarasan