முடிவுக்கு வருகிறது வெயிட்டிங் லிஸ்ட்? 3000 புதிய ரயில்கள் இயக்கம்- ரயில்வே அறிவிப்பு…

மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் 3000 புதிய ரயில்கள் இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது.  குறைந்த பயண நேரம்,  குறைந்த கட்டணம்,  பயண வசதி…

மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் 3000 புதிய ரயில்கள் இயக்குவதாக ரயில்வே அறிவித்துள்ளது. 

குறைந்த பயண நேரம்,  குறைந்த கட்டணம்,  பயண வசதி உள்ளிட்ட காரணங்களால் மக்கள் ரயில் பயணத்தையே அதிகம் தேர்வு செய்கின்றனர்.  பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தும் போதிய ரயில்கள் இல்லை என மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.  இதனால் காத்திருப்பு பட்டியல் நிலையிலேயே பெரும்பாலான பயணச்சீட்டுகள் உள்ளன.

மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில்கொண்டு அடுத்த 5 ஆண்டுகளில் 3000 புதிய ரயில்கள் அறிமுகப்படுத்த திட்டமுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில்,

”தற்போது ரயில்வேயில் ஆண்டுக்கு 800 கோடி பயணிகள் பயணம் செய்கின்றனர். மக்கள்தொகை அதிகரித்து வருவதால்,  நான்கு முதல் ஐந்து ஆண்டுகளில் திறனை 1,000 கோடியாக அதிகரிக்க வேண்டும்.  இதற்காக, எங்களுக்கு 3,000 கூடுதல் ரயில்கள் தேவை,  இது பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க  பல பயணங்களை மேற்கொள்ளும் ” என்றும்  அவர் கூறினார். ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே 200 முதல் 250 புதிய ரயில்களை சேர்க்க வாய்ப்புள்ளது என்றும் அவர் கூறினார்.

அவற்றில் 400 முதல் 450 வரை வந்தே பாரத் ரயில்கள் சேர்க்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.