உதகையில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகைக்கு நாள்தோறும் இங்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் இங்கு சுற்றுலா வருவோர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இங்குள்ள சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் வாகனங்களில் உதகையை கண்டு ரசிக்க வரும் சுற்றுலாப்பயணிகள்,உள்ளூர்வாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் கடுமையாக அவதியுறும் உதகை சாலைகள் தற்போது கால்நடைகளால் மேலும் அவதிக்குள்ளாகியுள்ளது. சாலைகளின் நடுவே திடீரென வரும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளால் விபத்து நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் அவ்வப்போது சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தாலும் இது தொடர்கதையாகவே உள்ளது.இதனால் வாகன கடுமையாக சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
—-வேந்தன்







