கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என்றும், மக்கள் பிரச்னைகளுக்கு திமுகவால்தான் தீர்வு காணமுடியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடைபெற்ற ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பரப்புரையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், திமுகவின் ஆட்சியை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் கைகளில் சமர்பிப்போம் என்று கருணாநிதி உயிரோடு இருந்தபோது உறுதிமொழி எடுக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த உறுதிமொழி நிறைவேறும் காலம் நெருங்கி வருவதாக குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சிக்கான ஆதரவு மக்களிடையே வெளிப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது என அவர் கூறினார். மக்கள் கவலைகளை போக்கும் வகையில் வருகின்ற திமுக ஆட்சி செயல்படும் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார்.