முக்கியச் செய்திகள் குற்றம் செய்திகள்

ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி – தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது வழக்கு

கோவையில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி என்று கூறப்பட்டதால் தகராறில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் செயல்பட்டு வரும் பப்பிஸ் ஹோட்டலில் செப்டம்பர் 11ஆம் தேதி மதுவுடன் கூடிய நடன நிகழ்விற்கு பாஜக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜான்சன் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர். அப்போது, ஜோடிகளுக்கு மட்டுமே அனுமதி என்றும், மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஓட்டல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, ஹோட்டல் நிர்வாகத்தின் சார்பில் கணக்காளர் விஷ்வபாரதி ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

புகாரின்பேரில், பாஜக சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜான்சன் மற்றும் அவருடன் வந்த லட்சுமணன், டேவிட், ஜெரிஷ் ஆகிய நான்கு பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இந்நிலையில், ஹோட்டலுக்கு வந்த பாஜக நிர்வாகி மற்றும் அவரது நண்பர்களை ஹோட்டல் ஊழியர்களும், பவுன்சர்களும் சேர்ந்து தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.

பா.ஜ.க கட்சி கொடியுடன் கார் இருக்கும் நிலையில், அதில் வந்தவர்களை பவுன்சர்கள் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நான் நன்றாக இருக்கிறேன்- பிரபல பாலிவுட் நடிகர் வெளியிட்ட வீடியோ

Web Editor

மக்கள் தலைகுனியும்படி எதையும் செய்யவில்லை: பிரதமர் மோடி

Mohan Dass

ஏழை எளிய மக்களுக்கு தடையில்லா ரேசன் பொருட்கள் – பிரதமர்

G SaravanaKumar