செப்.20ஆம் தேதிக்கான திருப்பதி தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 17) காலை செப்டம்பர் 20ஆம் தேதிக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்துக்கான டிக்கெட்டுகள் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு…

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சனிக்கிழமை (செப்டம்பர் 17) காலை செப்டம்பர் 20ஆம் தேதிக்கான தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்துக்கான டிக்கெட்டுகள் இதற்கு முன்னர் வெளியிடப்பட்டு பக்தர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில் தேவஸ்தானம் செப்டம்பர் 20ஆம் தேதிக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் செப்டம்பர் 17ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடவுள்ளது.

வரும் 20ஆம் தேதி கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தை முன்னிட்டு ஏழுமலையான் தரிசனம் 4 மணி நேரம் ரத்து செய்யப்படவுள்ளது.  எனவே, அன்று குறைந்த அளவிலான தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிடவுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளத்தில் இந்த டிக்கெட்டுகளை சனிக்கிழமை காலை முதல் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

திருப்பதி கோயிலில்ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று ஆலயம் சுத்தம் செய்யப்படும். அதன்படி, வருகிற 20ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் சுத்தம் செய்யப்பட்டு, மூலிகை கலவை கோயில் சுவர்களில் தெளிக்கப்படும். இதனால் அன்று 5 மணி நேரம் தரிசனம் ரத்து செய்யப்பட்டு காலை 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.