பாஜக மத அரசியல் செய்கிறது; கபில் சிபல் கடும் விமர்சனம்

மத்திய அரசுக்கு ஏழைகளை பற்றி அக்கறையில்லை எனவும், அவர்கள் மத அரசியலை மட்டுமே செய்வதாகவும் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் தனியார் செய்தி நிறுவனத்திற்கு…

மத்திய அரசுக்கு ஏழைகளை பற்றி அக்கறையில்லை எனவும், அவர்கள் மத அரசியலை மட்டுமே செய்வதாகவும் கபில் சிபல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், பாஜக தலைவர்கள் உண்மையான உலகத்தில் இல்லை. அதன் காரணமாகவே ஏழைகளின் வருமானம் உயர்ந்து இருப்பதாக கூறி வருகின்றனர்.

ஒரு மாதத்திற்கு 6000 ரூபாய் சம்பாதித்த ஒருவர் தற்போது மாதம் 25000 ரூபாய் சம்பாதிப்பதாக கூறியிருக்கிறார். இதனை மிகவும் கொடூரான ஜோக்காகத்தான் பார்க்க முடியும். பாஜக மற்றும் அந்த கட்சி தலைவர்களின் வருமானம் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. பொதுமக்களின் வருமானம் உயரவில்லை என்றார்.

எரிபொருள் விலையும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. ஏழைகள் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. மத அரசியல் மட்டுமே அவர்கள் செய்கின்றார்கள். இந்த அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வர உள்ள உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் இருந்து இது துவங்கும்” என கபில் சிபல் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.