இந்தியாவில் தொடர்ந்து குறைகிறது கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று 12,514 பேருக்கும் நேற்று முன்…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,423 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. நேற்று 12,514 பேருக்கும் நேற்று முன் தினம் 12,830 பேருக்கும் கொரோனா தொற்று பதிவாகி இருந்தது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 10,423 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 15,021 பேர் மருத்துவமனையில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் சதவிகிதம் 98.21% ஆக இருக்கிறது. இதுவரை 3,36,83,581 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இப்போது 1,53,776 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் ஒரே நாளில் 443 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4,58,880 ஆக உள்ளது.

நாடு முழுவதும் 1,06,85,71,879 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.