இந்தியா

“காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்துள்ளது” – கபில் சிபல் விமர்சனம்

காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்திருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு முழு நேரத் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், ஜம்முவில் நடைபெற்ற அமைதி மாநாடு என்ற கூட்டத்தில் ஒன்றிணைந்து பங்கேற்றனர். அப்போது பேசிய கபில் சிபல், “காங்கிரஸ் கட்சியின் வலிமை குறைந்திருக்கும் உண்மையை பார்த்து வருகிறோம். இதனால், அனைவரும் ஒன்றிணைந்து கட்சியை வலுப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதனைத் தொடர்ந்து பேசிய மற்றொரு மூத்த தலைவரான ஆனந்த் சர்மா, கட்சியின் நலனுக்காகவே தாங்கள் குரல் கொடுப்பதாகவும், தங்களுக்கு வயதாவது போல கட்சி வலுகுறைவதை விரும்பவில்லை என கூறினார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற நடிகரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜ்ப ப்பர், மகாத்மா காந்தியின் கண்ணோட்டம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசத்தின் சட்டம் மற்றும் அரசியலமைப்பை முன்னெடுத்து செல்லும் வகையில் காங்கிரஸ் வலுவாக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதமாற்றம் செய்வதற்கு வெளிநாட்டு நிதி: அமலாக்கப்பிரிவு தகவல்

Halley Karthik

கால்பந்து விளையாட்டில் இந்தியா கடந்து வந்த பாதை…

EZHILARASAN D

டெல்லிக்குள் செல்ல தயாரானது மாபெரும் டிராக்டர் பேரணி… சுமார் 3 லட்சம் டிராக்டர்களுடன் விவசாயிகள் பங்கேற்பு!

Nandhakumar