வாகனங்களை வாடகைக்கு விடுவதாகக் கூறி ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட நபரை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கிண்டியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனக்கு சொந்தமான பொருட்களை சரக்கு வாகனங்கள் மூலம் வெளியூர்களுக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளார். அதற்காக India Mart என்ற ஆன்லைன் வர்த்தக தளம் மூலம் மகாபலிபுரத்தில் உள்ள பூஞ்சேரி என்ற முகவரியில் செயல்படும் விநாயகா அன் கோ என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து இரண்டு வாடகை சரக்கு வாகனங்களுக்கு முன் தொகையாக 30 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால் சரக்கு வாகனங்களை அனுப்பாத நிலையில் சம்பந்தப்பட்ட முகவரிக்கு சென்றுபார்த்தபோது போலியான முகவரியை கொடுத்து ஏமாற்றியது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் சென்னை அடையாறு சைபர் க்ரைம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கொசப்பேட்டையைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொள்ளும் நபர்களிடம் சரக்கு வாகனங்களை வாடகைக்கு விடுவதாக கூறி முன்பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.