பரோல் விடுப்பு தொடர்பாக உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்கில் 2016ல் கைதான முகமது அலிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி 2019ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் தனக்கு சிறை விடுப்பு வழங்க கோரி புழல் சிறை நிர்வாகத்திடம் முகமது அலி விண்ணப்பித்துள்ளார்.
அதனை பரிசீலித்த சிறை நிர்வாகம், தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்றாண்டுகள் கழித்துதான் விடுப்பு வழங்க முடியுமென கூறி விண்ணப்பத்தை நிராகரித்ததுள்ளது.இதுதொடர்பான புழல் சிறை கண்காணிப்பாளர் உத்தரவை எதிர்த்து முகமது அலி சென்னை உயர் நீதிமன்றத்தில் முகமது அலி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், மஞ்சுளா இன்று விசாரணைக்கு வந்தது. தண்டனை கைதிகளுக்கு பரோல் விடுப்பு வழங்கும்போது, விசாரணை கைதியாக சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன், நான்கு வாரத்திற்குள் புதிய விண்ணப்பத்தை அளிக்க மனுதாரருக்கும், அது கிடைத்த நான்கு வார காலத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசிற்கும் உத்தரவு பிறப்பித்தனர்.







