உயர்நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் விசாரணை!

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பி. தனபால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:…

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் ஆன்லைன் மூலமாகவும் வழக்கு விசாரணை நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பி. தனபால் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

உயர்நீதிமன்ற அனைத்து வழக்கு விசாரணைகளும் வரும் 3-ம் தேதி முதல் வாரத்தில் ஒரு நாள் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் நேரடி மற்றும் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்படும்.

ஆன்லைன் விசாரணைக்கு தேவையான அனைத்து வசதிகளும் எடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் நடைபெறும் வழக்குகளில் வழக்கறிஞர்கள் ஆன்லைன் மூலமாகவும் ஆஜராகலாம்.

மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தலைமை பதிவாளர் தனபால் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.