கோவில்பட்டியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி!

கோவில்பட்டியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பரிசுகளை தட்டிச் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி…

கோவில்பட்டியில் மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது. கோவில்பட்டி ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு ஃபோகஸ் ஸ்போர்ட்ஸ் இந்தியா சார்பில் இந்த வில்வித்தை போட்டி நடைபெற்றது.

மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர்,
மதுரை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாவணவர்கள் கலந்து கொண்டனர்.


போட்டியானது 6 வயதுக்குட்பட்டோர், 8, 10, 12, 14, 17, 19 ஆகிய வயதிற்கான பிரிவுகளிலும் மற்றும் மூத்தோர் பிரிவுகளில் ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன.

மேலும் இந்தியன், ரீக்கோ, காம்போ, பேர்போ, பேர்பிகினர் உள்ளிட்ட பல்வேறு வகை
போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் அதிக புள்ளிகளை வென்றோருக்கு சைக்கிள்கள்
பரிசாக வழங்கப்பட்டது. மேலும் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டமும் வழங்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.