ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்றைய சட்டமன்ற நிகழ்ச்சியில் தொடக்கமாக மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மறைந்த பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்ட ஜெகன் கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அவசர கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இச்சம்பவம் தொடர்பாக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சமூக நீதியை காக்கும் மண்ணான தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் தவிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இதனை அடுத்து ஆன்லைன் தடை சட்டத்தின் சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே அனுப்பபட்ட சட்டமுன்வடிவு ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டது. ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதத்தில் இடம்பெற்றிருந்த விவரங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். இதனையடுத்து ஆளுநர் திருப்பிய அனுப்பிய கடிதம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உரை நிகழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”இதயமுள்ளவர்கள் யாருக்கும் இந்த சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவிக்க முடியாது. சட்ட ஒழுங்கை பேணுவதும்,மக்களை பாதுகாப்பதும், மாநில அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமை. மாநில எல்லைக்குள்ள மக்கள் அனைவரையும் காக்க மாநில அரசுக்கு உரிமை உண்டு.” என தெரிவித்தார்.
இதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், கொங்கு ஈஸ்வரன் , மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா , காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை, அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரம் , ஓ.பன்னீர் செல்வம், விடுதலை சிறுத்தை கட்சி உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள், பாமக வின் ஜி.கே.மணி மற்றும் பாஜக வின் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் ஏகமனதாக ஆதரவு தெரிவித்ததையடுத்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்ட சட்ட மசோதா நிறைவேறியதாக சபநாயாகர் அப்பாவு அறிவித்தார்.







