புதுக்கோட்டையில் பாண்டிய மன்னன் குறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு!

புதுக்கோட்டை மாவட்டம் சாணவயலில் பாண்டிய மன்னரான முதலாம் சுந்தர பாண்டியன் குறித்த மிகப் பழமையான கல்வெட்டு கண்டுபிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சாணவயலில் உடைந்து துண்டான நிலையில் முதலாம் சுந்தர பாண்டியன் குறித்த கல்வெட்டு ஒன்று…

புதுக்கோட்டை மாவட்டம் சாணவயலில் பாண்டிய மன்னரான முதலாம் சுந்தர பாண்டியன் குறித்த மிகப் பழமையான கல்வெட்டு கண்டுபிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் சாணவயலில் உடைந்து துண்டான நிலையில் முதலாம் சுந்தர பாண்டியன் குறித்த கல்வெட்டு ஒன்று கிடப்பதாக பொறியாளர் மா.இளங்கோவன்
தஞ்சாவூர் தமிழ் பல்கலைகழகத்தை சேர்ந்தவரும், தொல்லியல் ஆய்வாளருமான மணிகண்டனுக்கு தகவல் அளித்தார். உடனடியாக தனது குழுவினருடன் அங்கு சென்று பார்த்ததில் அக்கல்வெட்டு மதுரையை மீட்ட முதலாம் சுந்தர பாண்டியன் காலத்தை சேர்ந்தது என  கண்டுபிக்கப்பட்டது.

நான்கரை அடி உயரமும், ஒன்னே முக்கால் அடி நீளமும் உடைய அக்கல்வெட்டில் மொத்தம் 114 வரிகள் உள்ளன. அவற்றில் 103 வரிகள் தெளிவாக உள்ளன.கல்வெட்டின் இறுதிப்பகுதி முழுவதுமாக சிதைந்துள்ளது. இறுதியாக ஸ்ரீ மாஹேஸ்வரர் ரக்ஷை என்ற முத்திரை இடம் பெற்றுள்ளது.

மிக முக்கிய வரலாற்று தகவல்களை கொண்டுள்ள இக்கல்வெட்டு வரலாற்று ஆய்வுகளுக்கு உதவிகரமாக இருக்கும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர்கள்.

—வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.