ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் உரிய தீர்வு காணவே, ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகளை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பினர், ஆளுநர் ஆர்.என்.ரவியை ரகசியமாக சந்தித்தது போன்ற செய்திகள் தவறாக பரப்பப்படுவதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆன்லைன் சூதாட்ட தடை பிரச்னையை தீர்க்கவே ஆளுநர் விரும்புவதாகவும், கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்டு, நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டதை போன்றே, தற்போதைய மசோதாவிலும் சட்ட விளக்கங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரத்தில் தங்கள் தரப்பிலுள்ள பிரச்னைகளை சொல்ல ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆளுநரை அணுகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தப் பிரச்னைக்கு உரிய தீர்வு கிடைக்கலாம் என்கிற எண்ணத்தில் அவர்களை அழைத்து ஆளுநர் பேசியதாகவும், அவர்கள் தரப்பு விளக்கத்தை ஆளுநர் கேட்டு தெரிந்துகொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னையை தீர்க்க ஆளுநர் விரும்புவதாலேயே ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.