மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக 9,699 காளைகளும், 5,399 மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் வரும் 15ஆம் தேதி
அவனியாபுரத்திலும், 16ஆம் தேதி பாலமேட்டிலும், 17ஆம் தேதி உலகப்புகழ்பெற்ற
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும்
காளைகளுக்கான பதிவு madurai.nic.in இணையதளம் மூலம் பதிவு கடந்த 10 ஆம் தேதி
நண்பகல் 12.10மணிக்கு தொடங்கி இன்று மாலை 5 மணி வரை பதிவு நடைபெற்று
நிறைவுபெற்றது.
இந்த ஆன்லைன் முன்பதிவில் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு,
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்பதற்கு 9,699 காளைகளும், 5,399
மாடுபிடி வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு ஆன்லைன் மூலமாக பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்
தகுதியான நபர்களுக்கு மட்டுமே போட்டிகளில் பங்கேற்பதற்கான அனுமதி டோக்கன்
பதிவிறக்கம் செய்ய இயலும்.
டோக்கன் பதிவிறக்கம் செய்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளைகள் மட்டுமே
ஜல்லிக்கட்டு விளையாட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்
தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.