பெரும்பாலான நாடுகளில் குளிர்காலம் ஆரம்பமாகி விட்டது. அதனால் எங்கு பார்த்தாலும் பனிபடர்ந்து காட்சியளிக்கிறது. அதிக பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். சாலைகளில் அதிக அளவிலான பனி படர்ந்திருப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணிகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பனி படர்ந்த ரயில்வே டிராக்கை சுத்தம் செய்யும் காட்சிகளை ரயில்வே துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த குளிர்காலத்தின் மிக அழகான காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை ஏராளமானோர் ஷேர் செய்து வருகின்றனர்.







