தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள ஸ்ட்ராபெரியை சுவைப்பது போன்ற வீடியோவை எம்.எஸ் தோனி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி தற்போது கிரிக்கெட்டில் இருந்து விவசாயத்திற்கு மாறியுள்ளார். இவர் தற்போது தனது 43 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட தனது பண்ணை வீட்டில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து எம் எஸ் தோனி தனது ஓய்வினை அறிவித்திருந்தார்.
இதன் பின்னர் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார். தனது விவசாய நிலத்தில் தோனி பப்பாளி, ஸ்ட்ராபெரி, தக்காளி முட்டைகோஸ், பீன்ஸ், ப்ரோக்கோலி, பட்டாணி, ஹாக் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை பயிரிட்டு வளர்த்து வருகிறார். தோனி இயற்கை முறையில் தயாரிக்கப்படும் உரத்தை மட்டுமே பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் தனது தோட்டத்தில் பயிரிட்டுள்ள ஸ்ட்ராபெரியை சுவைப்பது போன்ற ஒரு வீடியோவை தோனி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் நான் தினமும் பண்ணைக்கு வந்தால் எந்த ஸ்ட்ராபெரியும் சந்தைக்குப்போகாது என வேடிக்கையாக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CJx0AucpG5_/?utm_source=ig_web_copy_link




