முக்கியச் செய்திகள் தொழில்நுட்பம்

தினம் கூடுதலாக 2ஜிபி டேட்டா – டவுன்லோட்களுக்கு பஞ்சமில்லா புது ஆஃபர்

vi double data offer

Vi Double Data Offer:

ஜியோவைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா (Vi) குறைந்த விலையில் அதிக டேட்டாக்களை வழங்கி வருகிறது. குறிப்பாக 28, 56, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் பிளான்கள் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலம். இப்போது, இதே பேக்குகளுக்கு டபுள் டேட்டா வழங்கி சர்பிரைஸ் கொடுத்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

Vi Rs 299 prepaid plan

இந்த 299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது புதிய சலுகையின் படி தினம் 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 28 நாட்கள்.

மொத்தமாக 28 நாட்களுக்கு 112 ஜிபி கிடைக்கிறது. இந்த பிளான் மூலம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடட் உள்ளூர் அல்லது தேசிய அழைப்புகளும் கிடைக்கிறது. தவிர ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். கிடைக்கிறது.

Vi Rs 449 prepaid plan

இந்த 449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது புதிய சலுகையின் படி தினம் 4ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி 56 நாட்கள்.

மொத்தமாக 56 நாட்களுக்கு 224GB டேட்டா கிடைக்கிறது. மேலும், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடட் உள்ளூர் அல்லது தேசிய அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். கிடைக்கிறது.

Vi Rs 699 prepaid plan

மேற்கூறிய இரண்டு பிளான்களை போல, இதிலும் 2 ஜிபியோடு கூடுதலாக 2 ஜிபி வழங்கப்படுகிறது. 84 நாட்கள் வேலிடிட்டியோடு மொத்தம் 336 ஜிபி வழங்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மன்னார்குடி முதல் ரெய்டு வரை; யார் இந்த காமராஜ்?

EZHILARASAN D

நிறைவு பெற்றது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.

Halley Karthik

மத்திய அரசு என்றுதான் அழைப்போம்: அன்புமணி ராமதாஸ்  

EZHILARASAN D

Leave a Reply