உரிய அனுமதி இல்லாமல் வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்தவர் கைது!

சென்னையை அடுத்த குன்றத்தூரில் உரிய அனுமதி இல்லாமல்  வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குன்றத்தூர் – பல்லாவரம் சாலை, மணஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் உரிமம் இல்லாமல் பட்டாசுகள் வைத்திருப்பதாக வந்த…

சென்னையை அடுத்த குன்றத்தூரில் உரிய அனுமதி இல்லாமல்  வீட்டில் பட்டாசுகள் வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குன்றத்தூர் – பல்லாவரம் சாலை, மணஞ்சேரியில் உள்ள ஒரு வீட்டில் உரிமம்
இல்லாமல் பட்டாசுகள் வைத்திருப்பதாக வந்த தகவலையடுத்து, குன்றத்தூர் போலீசார் அந்த வீட்டில் சென்று சோதனை செய்தபோது உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு பெட்டிகள் வைத்திருந்தது தெரியவந்தது.  இதையடுத்து அவரது வீட்டில் இருந்து 300க்கும் மேற்பட்ட பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்த போலீசார் உரிய அனுமதியில்லாமல் பட்டாசுகளை வீட்டில் வைத்திருந்த செல்வகுமார் என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஆண்டுதோறும் இந்த பகுதியில் பட்டாசு கடை நடத்தி வரும் இவர்,  தற்போது பட்டாசு கடை நடத்துவதற்கான அனுமதி காலாவதியான நிலையில்,  அதனை புதுப்பிக்காமல் மீண்டும் பட்டாசுகளை உரிய அனுமதியில்லாமல் வீட்டில்
வைத்திருந்தது தெரியவந்த நிலையில்,  பட்டாசுகளை பறிமுதல் செய்து தொடர்ந்து
அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  உரிய அனுமதி இல்லாமல் வீட்டில்
இருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கும் சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.