சேலம் ஆர்ஆர் உணவகத்திற்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்!

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே உணவு பாதுகாப்பு தரச் சான்று புதுப்பிக்காததால்,  சேலம் ஆர்ஆர் உணவகத்திற்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் அருகே பிரபலமான சேலம் ஆர்.ஆர்…

சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே உணவு பாதுகாப்பு தரச் சான்று புதுப்பிக்காததால்,  சேலம் ஆர்ஆர் உணவகத்திற்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் அருகே பிரபலமான சேலம் ஆர்.ஆர்
பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது.  இந்தக் கடையில் தினசரி ஏராளமான
வாடிக்கையாளர்கள் வந்து உணவு அருந்தி செல்வது வழக்கம்.  இந்த உணவகத்தில்
கடந்த ஓராண்டாக உணவு பாதுகாப்பு தரச் சான்றிதழ் புதுப்பிக்கக்கூறி உணவு
பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஓராண்டாகியும் கடை நிர்வாகம் உணவுபாதுகாப்பு தரச் சான்றிதழ்
புதுப்பிக்காததால்,  நேற்று அதிரடியாக கடைக்கு வந்த திருவள்ளூர் மாவட்ட உணவு
பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ் தலைமையிலான அதிகாரிகள் உள்ளே இருந்த ஊழியர்களை வெளியேற்றி உணவகத்தை பூட்டி நடவடிக்கை மேற்கொண்டனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.