ஈரோடு மாவட்டம் பவானியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஓய்வு பெற்ற தபால் ஊழியர் பச்சியப்பன் என்பவர் உயிரிழந்தார் மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி அருகே லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் பச்சியப்பன்.இவர் தபால் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பவானிக்கு சொந்த வேலை காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு வீடு திரும்பம் போது ஈரோடு செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் பச்சியப்பன் வாகனத்தின் மீது மோதியுள்ளார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இச்சம்பவத்தில் பச்சியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பவானி போலீசார் பச்சியப்பன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தொடர்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பவானி அரசு
மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை செய்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து பவானி போலீசார் விசாரணை
நடத்தி வருகின்றனர்.







