விக்ரம் – பா.ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்!

பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார்.  சியான் 61: சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பூஜையில் நடிகர் சிவகுமார், ஆர்யா, நடன…

பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார்.
 சியான் 61: சமீபத்தில் நடந்த இந்த படத்தின் பூஜையில் நடிகர் சிவகுமார், ஆர்யா, நடன இயக்குநர் சாண்டி, கலையரசன் மற்றும் படக் குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாகும்.
விக்ரமின் கோப்ரா மற்றும் ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது இந்த இந்த இரு படங்களும் பெறும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.  பொன்னியின் செல்வன் படத்தைத் தொடர்ந்து, விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். 90 கால கட்டத்தில் கேஜிஎஃப் இல் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் என ரஞ்சித் தெறிவித்துள்ளார்.
சர்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்கு பின் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில், முதல்  முறையாகச் விக்ரம் கதையின் நாயகனாக நடிப்பதால், இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் துவங்கப்படும் எனப் படக் குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.