“ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்” – ஜி-7 மாநாட்டில் பிரதமர் பேச்சு

உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு, இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி உறுதிப்படுத்தியுள்ளார். ஜி-7 உச்ச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா இரண்டாவது…

உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு, இந்தியாவின் ஆதரவை பிரதமர் மோடி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜி-7 உச்ச மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா இரண்டாவது அலையின்போது, இந்தியாவுக்கு உதவிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

ஜனவரி – மே மாதங்களுக்கு இடையில், கொரோனா தொற்றால் இந்தியாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததாகவும், மேலும், மிகவும் வேகமாக தொற்று பரவியதால், நாடு முழுவதும் மருத்துவ வசதிகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

அமெரிக்கா, கனடா போன்ற பல நாடுகளிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளிட்ட உதவிகளைப் பெற்றதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். தொடர்ந்து, உலகளாவிய சுகாதார நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்த பிரதமர் மோடி, “ஒரே பூமி ஒரே ஆரோக்கியம்” அணுகுமுறையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.