யூரோ கால்பந்து போட்டி: மைதானத்தில் நிலைகுலைந்த டென்மார்க் வீரர்!

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது, மைதானத்தில் திடீரென நிலைகுலைந்த டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 நாடுகள் பங்கேற்கும், 16-வது யூரோ…

யூரோ கோப்பை கால்பந்து போட்டியின்போது, மைதானத்தில் திடீரென நிலைகுலைந்த டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன், சிகிச்சைக்கு பின் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 நாடுகள் பங்கேற்கும், 16-வது யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. கோபன்ஹேகனில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், பின்லாந்து- டென்மார்க் அணிகள் மோதின. போட்டி தொடங்கிய முதல் பாதியின் பிற்பகுதியில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் திடீரென மயங்கி விழுந்தார்.

இதனால், இருஅணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். மயங்கி விழுந்த எரிக்சன் அசைவின்றி இருந்ததால், உடனடியாக மருத்துவக் குழு வரவழைக்கப்பட்டு மைதானத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது, எரிக்சனை சுற்றி நின்ற டென்மார்க் வீரர்களில் சிலர் கண் கலங்கினர். டென்மார்க் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கிய நிலையில், டென்மார்க், பின்லாந்து இடையேயான போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து எரிக்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை (சிபிஆர்) அளித்தனர். அதனையடுத்து கிறிஸ்டியன் எரிக்சன் நலமுடன் இருப்பதாக மருத்துவனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.