முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

அடுத்தடுத்து பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் இணையும் பாஜக நிர்வாகிகள்

தமிழக பாஜகவின் மாநில நிர்வாகிகள் தீலிப் கண்ணன், அம்மு என்கிற ஜோதி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.

தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை மீது அதிருப்தி கொண்ட முக்கிய பொறுப்புகளில் உள்ள நிர்வாகிகள் பலர் , அக்கட்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேற தொடங்கியுள்ளனர். அக்கட்சியில் இருந்து வெளியேறும் நிர்வாகிகளை அதிமுக தலைமை அரவணைக்கத் தொடங்கியுள்ளது. நேற்று பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல் குமார் பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த அறிக்கையில், அண்ணாமலையின் ஒவ்வொரு செயல்பாடுகள் குறித்தும் கட்டமாக விமர்சனம் செய்திருந்தார். பின்னர் பாஜகவிலிருந்து விலகிய சிடிஆர். நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். நிர்மல் குமார் அதிமுகவில் இணைந்ததற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இதன் நிலையில், பாஜகவில் இருந்து விலகிய நிர்மல்குமாரை தொடர்ந்து, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன், ஓபிசி அணியின் மாநில செயலாளர் அம்மு என்கிற ஜோதி , தமிழக பாஜகவின் அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத்தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு நேரில் சென்று, தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

அதிமுகவில் இணைந்தவர்கள் பேசுகையில், அண்ணாமலையின் செயல்பாடுகளால் நாங்கள் சுத்தந்திரமாக செயல்பட முடியாத நிலையில் இருந்தோம். நான்கு பேர் கொண்ட கும்பல்தான் பாஜகவை இயக்குகிறது. எங்களை போன்று பலரும் அண்ணாமலை மீது அதிருப்தியில் உள்ளனர். விரைவில் அவர்களும் வெளியே வருவார்கள் என தெரிவித்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஜூலை 19 ல் தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்

EZHILARASAN D

Silhouette Photography மூலம் இணையத்தை கலக்கும் இளைஞர்!

Jayapriya

போராட்டக் களத்தில் தங்குவதற்கு வீடுகளை கட்டிவரும் விவசாயிகள்!

Halley Karthik