ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்திய நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவிடம் இன்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் பீகாா் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாதின் மனைவி ராப்ரி தேவியிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று 5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்குத் தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள லாலு பிரசாத், அவரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்டோரை வரும் 15-ம் தேதி நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், பாட்னாவில் உள்ள ராப்ரி தேவி வீட்டில், அவரிடம் சிபிஐ குழு திங்கள்கிழமை 5 மணி நேரம் விசாரணை மேற்கொண்டது. அதேவேளையில் வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த வழக்குத் தொடர்பாக லாலு பிரசாதிடம் விசாரணை நடத்த சிபிஐ நோட்டீஸ் அளித்துள்ளது. அதன் அடிப்படையில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது.