மொட்டை மாடியில், 540 பேர் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் பிரமாண்ட படம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் 28 மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட 540 பேர் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் பிரமாண்ட படத்தையும் வைத்து அசத்தியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி…

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இளைஞர் ஒருவர் தனது வீட்டின் மொட்டை மாடியில் 28 மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட 540 பேர் புகைப்படங்களுடன் பிரதமர் மோடியின் பிரமாண்ட படத்தையும் வைத்து அசத்தியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாரதி நகரை கிருஷ்ண பிரசாத் புகைப்படத் துறையின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக பல்வேறு மாநிலங்களுக்கும் சென்றுள்ளார். இதன் தொடர்ச்சியாக தனது வீட்டின் மொட்டை மாடியில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் உட்பட 28 மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்களின் புகைப்படங்களுக்கு நடுவே பிரதமர் மோடியின் பிரம்மாண்ட புகைப்படத்தையும் வைத்து அசத்தியுள்ளார்.

இதனை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதோடு, கிருஷ்ண பிரசாத்-க்கு தங்களின் வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.