சையத் முஷ்டாக் அலிக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியின் ஷாருக்கான், கடைசி பந்தில் சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்ததை தோனி பார்த்து ரசித்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரின் இறுதிப் போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. இதில் கர்நாடக அணியும் தமிழ்நாடு அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.
152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தமிழ்நாடு அணிக்கு கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. தமிழ்நாடு அணியின் வீரர் ஷாருக்கான் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இந்த திரில் வெற்றி நேற்று பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ்நாடு அணி விளையாடும் கடைசி ஓவரை பார்த்தபடி இருக்கிறார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisement: