மதுரையில் 108 அவசர ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்து தாயையும் சேயையும் காப்பாற்றிய ஓட்டுநர் மற்றும் மருத்துவ உதவியாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த வேல்பாண்டி என்பவரின் மனைவி சரண்யா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மகப்பேறு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மதுரை ரிங்ரோடு சாலையில் 108 ஆம்புலன்ஸ் சென்ற போது சரண்யா வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதையடுத்து சாலை ஓரத்தில் ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டதோடு சரண்யாவுக்கு மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் பிரசவம் பார்த்துள்ளார்.
இதில் சரண்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 108 ஆம்புலன்சில் பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் சின்னக்கருப்பன் மற்றும் ஓட்டுநர் இருளாண்டி ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.