முதல் நாளில் இந்திய அணி 357 ரன்கள் குவிப்பு

  இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட்…

 

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 டி20, 2 டெஸ்ட் தொடர் என விளையாடி வருகிறது. டி20 தொடரை 3 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இந்தியா இலங்கை இடையேயான மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து விளையாடிய இந்திய அணி முதல்நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி சார்பில் ரிஷப் பந்த் 96 ரன்களும், அனுமன் விஹாரி 58 ரன்களும் எடுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.