சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே திடீர் மறைவு: வீரர்கள் உருக்கம்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிரிழப்புக்கு, இந்திய அணி வீரர்கள் உள்பட பலரும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்.  வார்னே தனது வில்லா…

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே உயிரிழப்புக்கு, இந்திய அணி வீரர்கள் உள்பட பலரும் உருக்கத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே காலமானார்.  வார்னே தனது வில்லா இல்லத்தில் சுய நினைவின்றி கிடந்தது கண்டறியப்பட்டதாகவும், உரிய மருத்துவ உதவிகள் வழங்கியும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

90, 80 ஸ் – களில் கிரிக்கெட் பார்த்தவர்கள் எவரும் அவ்வளவு எளிதில் ஷான் வார்னேவின் சுழற்பந்துகளை மறந்து விட முடியாது. வார்ன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கபடும் அவரின் ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் திணறாத பேட்ஸ்மேன்களும் கிடையாது, ரசித்து பேசாத, வர்ணனையாளர்களும், ரசிகர்களுமே இல்லை என்றே கூற வேண்டும்.

1969 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்த வார்னே, சிறு வயது முதலே கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர்.

வார்னேவின் முக்கிய தருணங்கள்

  • சுழற்பந்து கிவீச்சாளராக தனது பயணத்தை தொடங்கிய இவர் 1992 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார்.
  • 1993 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த தொடரில் ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக களமிறங்கினார்.
  •  1992 முதல் 2007 வரை ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடியவர்.
  • 1993 ல் ஆஸ்திரேலியாவின் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின்போது, 6 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் இவர் ஒட்டு மொத்தமாக 34 விக்கெட்களை கைப்பற்றி உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
  • 145 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 194 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய வார்னே டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் .
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இலங்கை அணியின் முரளிதரன்-க்கு அடுத்ததாக ஷேன் வார்னே உள்ளார்.
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 10 முறை இவர் 10 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.
  • சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா போன்ற உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிவர்
  • 2007 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த பின்னர், ஐபிஎல் தொடரின் முதல் சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ஷேன் களமிறங்கினார்.
  • 2008-ல் நடைபெற்ற முதல் ஐபிஎல் தொடரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றிக் கோப்பையை பெற்றுத்தந்தவர் என்ற பெருமைக்குரியவர் வார்னே.

வார்னே போன்ற ஒரு மாயாஜால பந்து வீச்சாளரை இதற்கு முன்பும் உலகம் பார்த்ததில்லை, அவருக்கு பின்னரும் கூட யாரும் உருவாகவில்லை. நீண்ட காலத்திற்கு வார்னேவின் பெயர் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் பதிந்திருக்கும்.

ஆஸ்திரேலிய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் மாரடைப்பால் திடீரென மரணமடைந்த செய்தி கிரிக்கெட்வீரர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷேன் வார்னே மறைவை தங்களால் நம்ப முடியவில்லை எனத் தெரிவித்துள்ள சச்சின், ஷேவாக் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வார்னேவின் கடைசி ட்விட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் ராட் மார்ஷ் மரணத்திற்கு அவர் இரங்கல் தெரிவித்திருந்தார்.

அதில் ராட் மார் காலமான என்ற செய்தி கேட்டு வருத்தமாக உள்ளது. இளம் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு அவர் தான் உத்வேக். ராட் கிரிக்கெட் மீது ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். ரோட் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்திருந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.