மணிப்பூரில் இறுதிகட்ட வாக்குப்பதிவு.

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் 2 ஆவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த…

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலின் 2 ஆவது மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற்றது. முதற்கட்டத்தின் போது, இம்பால் கிழக்கு, மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

இந்நிலையில், மீதி உள்ள 22 தொகுதிகளுக்கான 2வது  மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இதில் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  8.38 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக 1,247 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்கட்ட தோ்தலின்போது ஏற்பட்ட வன்முறையால் சுராசாந்த்புா், காங்போக்பி, இம்பால் கிழக்கு மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 12 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டது.அந்த வாக்குச்சாவடிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.